1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Vi Announced new plans for mew customers

ஆன்லைன்ல வாங்குனா அதிரடி சலுகை! – புது கஸ்டர்மர்களுக்கு வி அறிவிப்பு!

Tech News
தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வி புதிதாக சிம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல்லை தொட்ர்ந்து தொலைத்தொடர்பு சேவையில் அதிகமான வசதிகளை வழங்க தொடங்கியுள்ளது வோடபோன் ஐடியா. இந்நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வி புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி வி தளத்தின் மூலம் ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் சிம் வாங்குவோர் ரூ.399 திட்டத்தை தேர்ந்தெடுத்தால் சில சலுகைகளை அறிவித்துள்ளது,

அதன்படி ரூ.399 ப்ரீபெய்டில் ரூ.297 சலுகையை விட அதிகமான வேலிடிட்டி காலம் மற்றும் வி திரைப்படங்கள் மற்றும் லைவ் தொலைக்காட்சி சேவைகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. ரூ.399 ப்ரிபெய்டில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.399 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜில் 40 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், ஆறு மாதங்களுக்கு 150 ஜிபி டேட்டா, 200 ஜிபி ரோல் ஓவர் மற்றும் வி தொலைக்காட்சி, திரைப்படங்களும் வழங்கப்படுகின்றன.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஐ.. பலூனு.. சட்டென குழந்தையாக மாறிய ராஜேந்திர பாலாஜி! – வைரலாகும் வீடியோ!