அரசே விழித்தெழு, அல்லேல் விலகிவிடு – கமலஹாசன் டுவீட்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் அரசே வித்திடு இல்லையேல் விலகிடு எனப் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு,தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது.
அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு எனத் தெரிவித்துள்ளார்.