திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (07:44 IST)

மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் தரம் குறைந்த போஸ்டர்: மதுரையில் பரபரப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் தரம் குறைந்த போஸ்டர்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் ’சில்லரை அரசியல் செய்யும் நேரமல்ல இது’ என கூறியிருக்கும் நிலையில் அவருடைய கட்சியினர் தரக்குறைவான போஸ்டர்களை ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த சிலர், அந்த பகுதியில் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் ஒரு குறிப்பிட்ட ஊடகத்தையும் அதில் பணிபுரிபவர்களையும் தரக்குறைவான விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் 
 
‘சில்லரை அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியிருக்கும் நிலையில் இப்படி சில்லறைத்தனமான போஸ்டர்களை அவரது தொண்டர்களே ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த போஸ்டர் அடித்து ஒட்டிய பணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர்களுக்கு உதவி செய்திருந்தால், கட்சி தலைவரும் பாராட்டியிருப்பார், 4 பேர் பயன் அடைந்திருப்பார்கள் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.