1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 10 ஜூன் 2020 (17:28 IST)

தொண்டனாகவே வாழ்ந்து தொண்டனாகவே மறைந்தார்: கமல்ஹாசன் இரங்கல்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் இன்று தமிழகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெ.அன்பழகன் மறைவிற்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்தது அரசியல் நாகரிகத்த்தின் உச்சகட்டமாக கருதப்பட்டது 
 
இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மையம் கட்சியின் தொண்டராக இருந்த திலக் என்பவர் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் குறித்த செய்தி அறிந்ததும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது
 
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம். 
நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும். திலக், தொண்டனாகவே வாழ்ந்தார், தொண்டனாகவே மறைந்தார். நற்சேவை நாயகா...நன்றி.