புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:54 IST)

ஆரவ்வுடன் நட்பு இல்லை! முதன்முதலாக இருவரின் திருமணம் குறித்து மனம்திறந்த ஓவியா!

கடந்த 2017ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான்.



குறுகிய காலகட்டத்தில் ஆரவ்வுடன் காதலில் விழுந்த ஓவியாவினால் தான் அந்த நிகழ்ச்சி அவ்வளவு பிரபலமானது . ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் மறுக்க மனம் தாங்காத ஓவியா நிகழ்ச்சியை விட்டே வெளியேறிவிட்டார். பிறகு ஆரவ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவ் மற்றும் ஓவியா அடிக்கடி வெளியில் சுற்றித்திரிவது போன்ற சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி தீயாக பரவியது.  
 
அதுமட்டுமின்றி ஓவியா அர்மிஸ்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் வெளியாகி  பரவியது. பிறகு  இந்த புரளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது எனக்கும் ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள்,  நிறைய சண்டைகள் இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம்.   
 
அதே போல் நானும் ஆரவ்வும் திருமணம் முடித்துவிட்டோம், திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன. அதெல்லாம் சுத்தப்பொய். அதே சமயம் தற்போது ஆரவ்வுடன் நட்பு மட்டுமெ எனக் கூற முடியாது. இருப்பினும் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்வது குறித்து எந்த ஒரு இப்போதைக்கு எண்ணமும் இல்லை என்று ஓவியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனை கேட்ட ஓவிய ஆர்மிஸ் ஒரே குஷியாகிவிட்டனர்.