வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (13:31 IST)

நான் செய்ததை இதுவரை எந்த நடிகையும் செய்யவில்லை; பூஜா குமார் பெருமிதம்

விஸ்வரூபம் 2 படத்திற்காக நான் செய்ததை இதுவரை எந்த இந்திய நடிகையும் செய்யவில்லை என்று பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

 
கமல் ஹாசன் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் திரைப்படம் குறித்து அவர் கூறியதாவது:-
 
இந்த படம் தாமதமானதில் எந்த வருத்தமும் இல்லை. எங்களின் கடின உழைப்பை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. கமல்ஹாசன் என கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
 
நீருக்கு அடியில் வெடிகுண்டை செயலிழக்க செய்ய வேண்டும். நீருக்கு அடியில் வேறு எந்த நடிகையும் இதுவரை ஸ்டண்ட் செய்ததாக தெரியவில்லை. தமிழ் படங்களில் நடிக்க விருப்பமாக உள்ளேன். நல்ல படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.