திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (13:23 IST)

ஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி பட்ஜெட்: கமல்ஹாசன்

ஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தற்போது தீவிரமாக அரசியலில் களமிறங்கியுள்ளார். திரைப்படங்களிலும் விடாமல் நடித்து வருகிறார். இவர் தற்போது ஊழலை ஒழிக்க தன்னிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
 
ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் வகையில் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன். தமிழ்நாட்டை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற வேண்டும். அதற்கு ஊழலை ஒழிக்க வேண்டும்.
 
ஊழலை ஒழிப்பதே எனது முக்கிய நோக்கம். தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் மேம்படுத்துவதே எனது முழுநேர பணியாக இருக்கும். எனக்கு இதைவிட சினிமா முக்கியமல்ல என்று கூறியுள்ளார்.