1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:29 IST)

இன்னைக்கு நான் என்ன செய்யறேன்னு பாருங்க - கமலுக்கு என்ன கோபம்?

தற்போது வெளியிடப்பட்டுள்ள பிக்பாஸ் புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் கோபமாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 
கடந்த ஒரு வார காலாமாக ஐஸ்வர்யாவுக்கு சர்வாதிகாரி டாஸ்க் கொடுக்கப்பட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருந்தது. ஆனால், பொன்னம்பலம் அவரை பிடித்துக்கொண்டு சிறையில் இருந்த அனைவரையும் விடுவித்ததால் சர்வாதிகாரம் முடிவிற்கு வந்தது. அதற்கு தண்டனையாக பொன்னம்பலம் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பாக வெளியான புரோமோ வீடியோவில் “ இன்னைக்கு பிக்பாஸ் பாக்க வாங்கன்னு சொல்றது சம்பளம் வாங்கின கடைமை. ஆனால், அதுக்கும் மேல எனக்கு ஒரு கடமை இருக்கு. அத நான் இன்னைக்கு செய்யப்போறேன். நீங்க வேடிக்கை பாருங்க.. நான் வேலைய பாக்குறேன்” என கோபமாக பேசுகிறார்.
 
எனவே, கமல்ஹாசன் ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறார்?. இன்றைக்கு என்ன செய்யப்போகிறார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளர் யாருக்காவது பெரிய தண்டனையை கொடுக்கப்போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
எனவே, இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக, பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் தாடி பாலாஜியை அவர் கண்டிப்பாரா அல்லது சர்வாதிகாரியாக ஓவராக ஆடிய ஐஸ்வர்யாவை கண்டிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...