1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (09:14 IST)

முகம் மாறும் போட்டியாளர்கள், லூசுத்தனமான டாஸ்க்: பார்வையாளர்கள் எரிச்சல்

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்தும் இன்னும் பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக கமல்ஹாசன் ஒருதலைபட்சமாக எடுத்து வரும் முடிவுகளால் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. மக்களின் எண்ண ஓட்டங்களை அறியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு டிசர்ட் கொடுக்கப்படும். அந்த டீசர்ட்டில் யாருடைய படம் இருக்கின்றதோ, அந்த கேரக்டராக அவர்கள் மாற வேண்டும். யாஷிகாவாக டேனியலும், மகத்தாக பொன்னம்பலமும் மாறி அடிக்கும் லூட்டிகள் அருவருப்பை ஏற்படுத்துவதாக கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.
 
இதுபோன்ற லூசுத்தனமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் பிக்பாஸ் கடையை மூட வேண்டிய நிலை வரும் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.