இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
சமீபத்தில் அவர் நடிப்பில் பாலிவுட்டில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய இரண்டும் வெற்றி பெற்று அவரை உச்ச நடிகையாக்கின. தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார்.
இந்நிலையில் அவரின் அடுத்த இந்தி படமாக சாவா பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தில் ஒரு மராட்டிய ராணியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஷ்மிகா “இந்த படத்தில் நடித்தது என் வாழ்நாள் சாதனை. இப்போதே என்னை சினிமாவில் இருந்து ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்” எனக் கூறியுள்ளார்.