1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (13:30 IST)

சாப்பாட்டுல கரப்பான்பூச்சி! அதிர்ச்சியான நிவேதா பேத்துராஜ்! – ஸ்விக்கி மீது புகார்!

நடிகை நிவேதா பேத்துராஜ் ஸ்விகியில் ஆர்டர் செய்த உணவில் கரப்பான்பூச்சி இருந்ததை போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் டிக் டிக் டிக், சங்க தமிழன், ஒருநாள் கூத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நிவேதா பேத்துராஜ். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நிவேதா பேத்துராஜ் ஸ்விகி ஆப் மூலமாக தனியார் உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

டெலிவரி ஆன உணவை பிரித்து பார்த்தவர் அதில் கரப்பான் பூச்சி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அதை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர் தரமற்ற உணவுகளை வழங்கும் உணவகத்திற்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விகி நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

இதற்கு ஸ்விகி நிறுவனம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரியதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் நிவேதா பேத்துராஜ் தெரிவித்துள்ளார்.