பிக்பாஸ் 5 சீசனுக்கு நீங்க ரெடியா? ஆரம்பிக்கும் தேதி இதோ!
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழகமெங்கும் அமோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன் முடிவடைந்துள்ளது. 5வது சீசன் அடுத்து ஆரம்பிக்க உள்ள நிலையில் அதையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார்.
இந்த சீசன் ஜூன் மாதமே துவங்க வேண்டிய நிலையில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கினாள் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிகழ்ச்சி துவங்கும் என கூறப்படுகிறது. போட்டியாளர்கள் தேர்வு விரைவில் துவங்கவுள்ளது. மேலும், போட்டியாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி. போன சீசனில் போட்டியாளர்கள் தனி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.