வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (09:13 IST)

பிரபல ஓடிடியில் அஞ்சலி மற்றும் சோனிய அகர்வால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ்!

பிரபல ஓடிடியான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அஞ்சலி நடிப்பில் புதிய வெப் தொடர் ஒன்று உருவாகியுள்ளது.

நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி  நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய வெப் தொடராக FALL உருவாகி வருகிறது. இந்த தொடரை சித்தார்த் ராமசாமி இயக்கியுள்ளார்.

பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பெண் மறந்து போன தன்னுடைய கடந்த காலத்தை தேடும் த்ரில்லர் தொடராக இது உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.