புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:04 IST)

நடிகை அஞ்சலியின்' புதிய முயற்சி கைகொடுக்குமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அஞ்சலி. இவர் தற்போது, தெலுங்கு , கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு வெப் தொடரில்  அஞ்சலி நடித்துள்ளார். இத்தொடர் வெர்டிஜ் என்ற கனட வெப் தொடரின்  ரீமேக் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதில், அஞ்சலியுடன் இணைந்து, ஏஸ்பிபி.சரண், சோனியா அகர்வ, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  அஜேஸ் இசையமைத்துள்ளார். கிஷன் சி எடிட்டராக பணியாற்றுகிறார்.

இந்த  நிலையில், ஃபால் வெப் தொடர் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின்  அஞ்சலி மீண்டும் தமிழில் பிஸியாக வலம் வருவதற்கு இந்த வெப்தொடர் கைகொடுக்கும் என தெரிகிறது.