ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:54 IST)

மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவுதினம் இன்று!

தமிழ் திரையிசைப் பாடல் ரசிகர்களால் மறக்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் மறைந்த பாடகி ஸ்வர்ணலதா.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்பட ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியவர் சொர்ணலதா. பாலக்காட்டைச் சேர்ந்த கடந்த 2010 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவு திரையிசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது.

சொர்ணலதா, இளையராஜா, தேவா, ஏ.ஆர்ரஹ்மான் உள்பட முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவ‌ரின் இசையிலும் பாடியுள்ளார். ரஹ்மான் இசையில் கருத்தம்மா படத்துக்காக இவர் பாடிய போறாளே பொன்னுதாயி... பாடல் அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. சொர்ணலதாவை பின்னணிப் பாடகியாக தமிழில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா தேரோட்டமா பாடலே அவரது முதல் தமிழ்ப் பாடல்.

இந்நிலையில் இன்று அவரின் 12 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு இசை ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் அஞ்சலிகளை சமூகவலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.