திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:43 IST)

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21வது ஆண்டு தினம்: அமெரிக்க மக்கள் அஞ்சலி!

Twin
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 21ஆவது ஆண்டு தினத்தை அமெரிக்க மக்கள் இன்று அனுசரித்து வருகின்றனர்.
 
அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்கா ஒருபோதும் இந்த தாக்குதலை மறக்காது என்று 21வது நினைவு தினத்தில் நாட்டு மக்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார் 
 
இந்த கோர சம்பவத்தில் 21வது ஆண்டு நினைவு தினம் நேற்று பெண்டகனில் அனுசரிக்கப்பட்டது. இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது