1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (13:56 IST)

நடிகை சோனியா அகர்வால் மறுமணமா? அவரே அளித்த விளக்கம்!

Sonia
நடிகை சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார். 
 
தனுஷ் நடித்த காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு கோவில், மதுரை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுபயலே உள்பட பல படங்களில் நடித்தார்.
 
இவர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர் 
 
இந்த நிலையில் விவாகரத்து பெற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் இரண்டு கைகளிலும் மெஹந்தி வரைந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இது குறித்து விளக்கமளித்த அவர் என்னுடைய திருமணத்திற்கான மெஹந்தி இந்த அளவு எளிமையாக இருக்காது என்று அவர் பதிலளித்து திருமணம் குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.