செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:24 IST)

சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் புதிய அப்டேட்

Actress Samantha
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக சமந்தா தற்போது தெலுங்கில் சகுந்தலம், யசோதா, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தினை சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்க, இப்படம் வரும் ஆகஸ்ட் 12 முதல் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாகிறது. திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

யசோதா படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் தற்போது 'யசோதா' என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' படத்தின் டீசர் செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், யசோதா படத்தின் டீசர் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.