செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (14:52 IST)

அச்சு அசல் இந்திரா காந்தி போலவே இருக்கும் கங்கனா… ’எமர்ஜென்ஸி’ படத்தின் புதிய அப்டேட்!

கங்கனா ரனாவத் எமர்ஜென்ஸி என்ற படத்தை இயக்கி அதில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கவும் உள்ளார்.

கங்க்னா ரனாவத் சமீபத்தில் பல மொழிகளில் உருவான தலைவி படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.இந்நிலையில் அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இது குறித்து முன்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் இந்திரா காந்தியாக நடிக்கும் ஒரு படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்’ எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தில் தான் தோன்ற இருக்கும் இந்திராகாந்தி கெட்டப்பையும் கங்கனா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.