வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (20:00 IST)

திருமண முறிவு ஏன்? பதிலளித்த நடிகை சமந்தா!

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  நாகார்ஜூனாவில் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர்,  இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படவே மீடியாக்களில் இதுகுறித்து தகவல் பரவியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

விவாகத்திற்குப் பின் சமந்தா  நடிப்பில்,புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் ஹிட் ஆனது. சர்ச்சையும் ஆனது.

இதையடுத்து, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர், விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவுடன் நடித்தார். இப்படமும் ஹிட் ஆனது.

இந்த நிலையில், திருமண முறிவுக்குப் பின் சமந்தா, தென்னிந்திய சினிமாவில்  அதிகக் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும், கரன் வித் காபி  நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சீசன் 7  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தாவிடம் அவர், திருமணம் முறிவு பறி கேட்டார். அதற்கு சமந்தா, சினிமாவில் திருமண வாழ்க்கையை காட்டியபோது,  நன்றாக இருந்தது. ஆனால், நிஜத்தில் அது கே.ஜி.எஃப்  போன்று இருக்கிறது என தெரிவித்துள்ளார்.