விஷாலின் மார்க் ஆண்டனி பட புதிய அப்டேட்!
விஷால் நடிப்பில் உருவாகவுள்ள மார்க் ஆண்டனி பட்த்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது..
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் விஷால். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என சமீபகாலமாக அப்டேட்கள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் இப்போது மீண்டும் இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இப்படம் 1990 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளதால் இதற்காக சென்னையில் அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப அண்ணாசாலை செட் போடப்பட்டு வனந்த நிலையில், இந்த செட் வேலைகள் தற்போது முடிந்துள்ளது. எனவே வரும் குறிப்பிட்ட தேதியில் பட்ப்பிடிப்பு தொடங்குவது உறுதியாகியுள்ளது.
மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.