புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (14:48 IST)

பெண்களை உரசவே பஸ்ஸில் போவேன் – சித்தப்புவை கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்

பிக்பாஸ் சீசன் 3-ல் சித்தப்பு சரவணன் “பெண்களை உரசுவதற்காக நான் பஸ்ஸில் போவேன்” என பேசியுள்ளது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேரன் தன்னை தவறான எண்ணத்தோடு தொட்டதாக மீரா மிதுன் பேசியதையடுத்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. அப்போது பேசிய கமல் “இப்போதெல்லாம் யாரும் பெண்களை இடிக்க பஸ்ஸில் ஏறுவது இல்லை. எல்லாரும் வேலைக்கு போகும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களை உரச பஸ்ஸில் ஏறிய காலமும் இருந்தது” என்று சொன்னதுதான் தாமதம், உடனே கையை தூக்கிய சித்தப்பு சரவணன் “நான் பெண்களை உரசுவதற்காகவே பஸ்ஸில் போவேன்” என பெருமையாக சொன்னார்.

இதற்கு அங்கு அமர்ந்திருந்த ஆடியன்ஸும் பலமாக கைத்தட்டி சிரித்தார்கள். சித்தப்புவை கலாய்த்து நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இதை பார்த்த பிண்ணனி பாடகி சின்மயி “யார் அந்த சரவணன்” என்று ட்விட்டரில் கேட்டிருக்கிறார். அதற்கு ஒருவர் பிக்பாஸ் வீடியோவை கமெண்டில் பதிவிட்டிருக்கிறார்.