சந்தானம் திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும்… தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை

Last Updated: சனி, 27 ஜூலை 2019 (18:19 IST)
நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என பிராமணர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சந்தானம் நடிப்பில் வெளிவந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஏ1. சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோது, அந்த டிரெயிலரில் பிராமண சமூகத்தை பற்றி அவதூறாக காட்சியமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், தற்போது ஏ1 திரைப்படத்தை பிராமணர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அந்த கோரிக்கையில், சமூகங்களிடையே நல்லிணக்கம் பேணுகின்ற அனைத்து இயக்கங்களும் இந்த திரைப்படத்தை கண்டிக்க முன்வர வேண்டும் எனவும், மேலும் பிராமன சமூகம் மட்டுமல்லாது, இதர சமூக நண்பர்களும் இப்படத்தினை புறக்கணித்திட வேண்டும் எனவும் பிராமண சங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :