அநீதியை தட்டிக்கேட்டு சேரனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய கமல்!

Last Modified சனி, 27 ஜூலை 2019 (17:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  இன்று  மீரா மிதுன்  வெளியேற்ற போவதால் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
அதற்கேற்றாற்போல் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் சேரனிடம் கமல் , என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம் மீராவும் சொன்னாங்க என்று கூறி பஞ்சாயத்தை ஆரம்பித்தார். பின்னர் மீரா மிதுனிடம் உங்களுக்கு இளைக்கப்பட்ட அநீதி என்ன என கேட்கிறார். 
 
மீரா நடந்தது என்னவோ அதை சாண்டியை முன்னிறுத்தி செய்து காட்டுகிறார். மேலும் மக்கள் எதிர்பார்த்தது போலவே மீராவுக்கு குறும்படம் போட்டு காட்டப்பட்டுள்ளது. எனவே இன்றைய நிகழ்ச்சியில் மீராவின் செயல் திரையிட்டு காட்டப்பட்டு அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 
 
சேரனுக்கு ஆதரவு தெரிவித்து கமல் நியாமான தீர்ப்பு வழங்கியதால் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாக உள்ளனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :