திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 மே 2019 (09:16 IST)

இதுதான் உடம்பை குறைத்த லட்சணமா? சிம்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

நடிகர் சிம்பு சமீபத்தில் லண்டனுக்கு சென்று ஒருசில மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்ததாக செய்திகள் வெளிவந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் சகோதரர் குறளரசனின் திருமண புகைப்படங்களில் சிம்பு ஸ்லிம் ஆக இருந்ததும் தெரிய வந்தது
 
ஆனால் உடற்பயிற்சிக்கு பின்னர் சிம்பு உணவுக்கட்டுப்பாட்டுடன் இல்லாததால் மீண்டும் வெயிட் போட்டுவிட்டார். நேற்று ஹன்சிகாவின் 50வது படமான 'மஹா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் சிம்பு மீண்டும் வெயிட் போட்டுவிட்டதை அறிந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
ஹன்சிகா நடித்து வரும் அவரது 50வது படமான 'மஹா' படத்தில் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வருகிறார். சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர் என்பதும், இந்த காதல் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் சிம்பு-ஹன்சிகா இணைந்து இந்த படத்தில் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது