வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (20:29 IST)

கசடதபற: 6 எடிட்டர்களை அடுத்து 6 ஒளிப்பதிவாளர்கள் பெயர்கள் அறிவிப்பு!

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு தயாரித்து வரும் 'கசடதபற' திரைப்படத்தில் எல்லாமே ஆறு மயம் தான். ஆறு ஹீரோக்கள், ஆறு ஹீரோயின்கள், ஆறு கதை, ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு கேமிராமேன், ஆறு எடிட்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆறு எடிட்டர்கள் பெயர்கள் நேற்று வெளியான நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு கேமிராமேன்கள் பெயர்களை பிரபல கேமிராமேன் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தில் பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் ஆகிய ஆறு  ஒளிப்பதிவாளர்கள் பணிபுரியவுள்ளனர். 
 
மேலும் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு  இசையமைப்பாளர்கள் யார் யார் என்பதை நாளை கங்கை அமரன் அறிவிக்கவுள்ளார். அப்படியே ஒவ்வொரு நாளும் ஒரு தகவலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
 
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு, ஜெய், வைபவ் ஆகிய ஆறுபேர் ஆறு கதையின் ஹீரோக்களாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது