திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (14:53 IST)

திருமண செய்திகள் வெறும் வதந்தி: சிம்பு விளக்கம்!

ஊடங்களில் எனது திருமணம் குறித்து வெளியாகும் தகவல் வெறும் வதந்திகள் என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். 
சிம்புவின் சகோதரர் குறளரசனின் திருமணம் நடந்து முடிந்ததை அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர்.  
 
இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். எனவே கூடிய விரைவில் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என செய்திகள் வெளியானது. 
 
இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார் சிம்பு, என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். 
 
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் பரவுகின்றன.
 
தற்போது திருமணம் குறித்து எந்த திட்டமும் இல்லை என்பதை விளக்கிக் கொள்கிறேன். அதற்கான உரிய நேரத்தில் இதுகுறித்து நானே தெரிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.