என் உடை பற்றி கமெண்ட் அளிக்க நீங்க யார்? நெட்டிசன்களுக்கு ஸ்ரீதேவி மகள் பதிலடி

Last Modified வெள்ளி, 7 ஜூன் 2019 (09:00 IST)
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குட்டி குட்டியாக உடையணிந்து ஜிம்முக்கு செல்வதுதான். அவரது குட்டி உடையை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல, சோனம்கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் கமெண்ட் அளித்துள்ளனர்.

இப்படி குட்டி குட்டியாய் டிரெஸ் போடுவதற்கு டிரெஸ்ஸே போடாமல் வெளியே வரலாமே? என நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ஜான்வி கபூர் தனது கவர்ச்சி உடையை தொடர்ந்து வருகிறார். அவரது ஜிம் உடை கிட்டத்தட்ட உள்ளாடை போலவே இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான இன்னொரு ஜிம் புகைப்படமும் நெட்டிசன்களை பேச வைத்துள்ளது. மேலே ஒரு மெல்லிய வெள்ளை உடையும் கீழே ஒரு உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ள ஜான்வி கபூருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. ஆனால் 'நான் அணியும் உடை குறித்து கருத்து கூற நீங்கள் யார்? உடை என் சுதந்திரம். என் நடிப்பில் குறை இருந்தாலும் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன், உடை என் சொந்த விஷயம், இதுகுறித்து கமெண்ட் அளிப்பவர்களை நான் கண்டு கொள்வதில்லை என்று பதிலடி அளித்துள்ளார் ஜான்வி கபூர்


இதில் மேலும் படிக்கவும் :