2020 மார்ச் வரை இந்திய கிரிக்கெட் அணி பயங்கர பிஸி! அட்டவணை அறிவிப்பு

Last Modified திங்கள், 3 ஜூன் 2019 (21:29 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்தியாவுக்கு தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் அணி, ஜிம்பாவே, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அடுத்தடுத்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவுள்ளதால் 2020ஆம் ஆண்டு மார்ச் வரை இந்திய கிரிக்கெட் அணி பயங்கர பிசியில் உள்ளது.
2019 செப்டபரில் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது

2019 நவம்பரில் வங்கதேச அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது

2019 டிசம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது
2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஜிம்பாவே அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளது

2020 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :