"இரண்டாவது நாளிலே கெத்து காட்டிய தல" சென்னை வசூல் மட்டும் இவ்வளவா!

Last Updated: சனி, 10 ஆகஸ்ட் 2019 (10:23 IST)
அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய நேர்கொண்ட பார்வை படத்தின் தற்போதையை வசூல் விபரம் வெளியாகியுள்ளது. 


 
எச் வினோத் இயக்கத்தில் அஜீத், ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியிருக்கும்  நேர்கொண்ட பார்வை  படம் எதிர்பார்த்தது போலவே நேர்கொண்ட பார்வை படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வேட்டையாடி வருகிறது.  
 
தமிழகம் அளவில் முதல் நாள் வசூல் 26.3 கோடி ரூபாய் என அஜித் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். 700 தியேட்டர்களில் 3700 ஸ்க்ரீன்களில் படம் வெளியானதாகவும், 98 சதவிகித காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாக போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருந்தனர். படம் வெளியாகி முதல் நாளான நேற்று சென்னையில் மட்டும் ரூ 1.58 கோடி வசூல் பெற்றதாகவும் தகவல் கிடைத்தது.
 
இந்நிலையில் படம் வெளியாகி இரண்டாம் நாளான இன்று சென்னையில் ரூ. 1.17 கோடி வசூல் செய்துள்ளது. ஆக மொத்தம் இரண்டு நாள் முடிவில் ரூ. 2.75 கோடி வசூலித்து வெற்றி நடைபோட்டு வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :