சென்னையைக் கலக்கும் நேர்கொண்ட பார்வை – முதல்நாள் வசூல் இவ்வளவா ?

Last Updated: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (12:15 IST)
அஜித் நடிப்பில் நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் முதல்நாள் சென்னை வசூல் இப்போது வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த 'நேர்கொண்டபார்வை' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பல இடங்களில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.  குறிப்பாக சென்னையில் காலை 4 மணி சிறப்புக் காட்சியாக ரோகிணி, பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட பல தியேட்டர்கள் திரையிடப்பட்டு ஆரவாரமாக வரவேற்பைப் பெற்றது. பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுவரும் நேர்கொண்ட பார்வை வசூலிலும் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் சென்னையில் முதல் நாள் வசூல் 1.58 கோடி ரூபாய் எனவும் ஆன்லைன் டிராக்கர்ஸ் வெளியிட்டுள்ளனர். இது இதுவரை எந்தப் படத்துக்கும் இல்லாத வசூல் ஆகும். ஆனால் காலைக் காட்சிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமானத் தொகைக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாளில்லாத சாதாரண வேலை நாளில் இவ்வளவு வசூல் வந்துள்ளது வாரக் கடைசியான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :