"அஜித் படத்திற்கு பேனர் வைத்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள்" - வைரல் புகைப்படம்!

Last Updated: சனி, 10 ஆகஸ்ட் 2019 (08:04 IST)
தமிழ் சினிமாவின் இரு துருவங்களான பார்க்கப்படும் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அஜித், விஜய் நண்பர்களாக இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒருவரையொருவர் எதிராளியாக பார்க்கப்படுவது காலமறிந்த உண்மை..  
இவர்கள் இருவரில் யாரேனும் படம் ரிலீஸ் ஆனால் போதும், ஒருவர் மாற்றி ஒருவர் தரம் தாழ்த்தி சண்டையிட்டு ட்விட்டரில் பெரிய போர் நிகழ்த்திவிடுவார்கள். ஆனால், தற்போது எல்லோரும் ஆச்சர்யப்படுமளவிற்கு அஜித் நடிப்பில் கடந்த 8ம் தேதி வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்திற்கு விஜய் ரசிகர்கள் பேனர் வைத்து கொண்டாடியுள்ளனர். 


 
இதன் மூலம் மற்ற ரசிகர்களுக்கு பாடமாகவும்.. இந்த வீண் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தும் அசத்திவிட்டனர் விஜய் ரசிகர்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்ககளில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :