”அஜித் படத்துக்கு போகனும்..லீவு கொடுங்க”.. துறை தலைவருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவர்

Last Updated: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (19:43 IST)
பிரபல நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியான நிலையில், படத்திற்கு செல்ல விடுமுறை அளிக்குமாறு ஒரு கல்லூரி மாணவர், தனது துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று (08.08.2019) உலகமெங்கும் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது, இந்நிலையில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு செல்ல தனக்கு விடுமுறை வழங்குமாறு, நாகப்பட்டணத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை படித்த துறை தலைவர், அந்த கடிதத்தை சிவப்பு மையால் அடித்து, அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து வரும்படி எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :