இரண்டு பிரபலங்களுக்கு பொக்கே அனுப்பிய சூர்யா!

surya
Last Modified வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (22:09 IST)
நடிகர் சூர்யா இன்று கோலிவுட்டின் இரண்டு பிரபலங்களுக்கு பொக்கே அனுப்பி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த இரண்டு பிரபலங்கள் அஜித் மற்றும் ஹெச்.வினோத் ஆகியோர்கள் ஆகும். சூர்யா எதற்காக பொக்கே அனுப்பினார் என்பதை சொல்ல தேவையில்லை
அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவர் நடித்த 'விஸ்வாசம்' படமாவது சிலருடைய நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெண்கள் விரும்பும் படமாகவும் இந்த படம் அமைந்துள்ளதால் 'விஸ்வாசம்' படத்தை விட இரண்டு மடங்கு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று நடிகர் சூர்யா, அஜித் மற்றும் ஹெச்.வினோத் ஆகிய இருவருக்கும் பொக்கே அனுப்பி, 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனது கைப்பட ஒரு வாழ்த்து கடிதத்தையும் சூர்யா அஜித்துக்கு எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

அஜித் உள்பட சில முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது அவர்களுக்கு பொக்கே அனுப்பி வாழ்த்து தெரிவிக்கும் வழக்கத்தை நடிகர் சூர்யா, கடந்த பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :