புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:33 IST)

நேர்கொண்ட பார்வையை முந்திய காஞ்சனா 3 – எங்கு தெரியுமா ?

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வைத் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான போது அதிக பார்வையாளர்களைக் கவர தவறியுள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நேர்கொண்ட பார்வை வெளியானது. வழக்கமான மசாலா படமாக இல்லாமல் பெண்களுக்கான பாதுகாப்புப் பற்றி பேசிய இந்த படம் திரையரங்கில் நல்ல வசூலை ஈட்டியது. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமம் ஜி தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேர்கொண்ட பார்வையை ஒளிபரப்பியது ஜி தொலைக்காட்சி. இதன் மூலம் டி ஆர் பி  அதிகமாக வரும் என எதிர்பார்த்தது ஜி தொலைக்காட்சி. அதற்குக் காரணம் அஜித்தின் விஸ்வாசம் படம் தொலைக்காட்சி வரலாற்றில் டி ஆர் பி யில் உச்சம் தொட்டது.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக நே.கொ.பா எதிர்பார்க்கப்பட்டது போல் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படவில்லை என செய்திகள் வெளியாகின. வழக்கமாக சீரியல்களின் டி ஆர் பியை விடக் கம்மியாகவே அதன் டி ஆர் பி வந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சன் டிவியில் ஒளிப்பரப்பான காஞ்சனா 3 அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது.