ஒரு கையில் சூடம்...மற்றொரு கையில் டாட்டூ! - விஸ்வாசம் 300-வது நாளை கொண்டாடிய பெண் ரசிகை!

papiksha| Last Updated: புதன், 6 நவம்பர் 2019 (13:10 IST)
தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவரது படம் வெளிவரும் நாளில் திருவிழாக்கோலம் போல மாறிவிடும். அந்தவகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த படம் "நேர்கொண்ட பார்வை" ஆனால், ரசிகர்கள் இந்த படத்திற்கு முன்னர் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்த விஸ்வாசம் படத்தை இன்னுமும் கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படம் வெளிவந்து நேற்றுடன் 300-வது நாளில் வெற்றிகராமாக அடியெடுத்து வைத்தது . இதனை அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக அஜித்திற்கு இப்படியும் ஒரு பெண் ரசிகை இருக்கிறாரா என ஆச்சர்யப்படுமளவிற்கு அவரது ரசிகை ஒருவர், தனது கையில் அஜித் என்ற டாட்டூவும்..இன்னொரு கையில் சூடத்தை வைத்துக்கொண்டு விஸ்வாசம் புகைப்படத்திற்கு தீவார்த்தனை செய்கிறார். 

 
இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்ச்சர்யத்துடன் ட்விட்டரில் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த ரசிகையின் வண்டியில் விஸ்வாசம் திருவிழா என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி விஸ்வாசம் வெற்றியை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். 
இதில் மேலும் படிக்கவும் :