திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (19:08 IST)

தளபதியோடு நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓடிருவேன்!

பிக்பாஸ் புகழ் அபிராமி, ஆரம்பத்தில் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வந்தார். களவு படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதையடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று பேமஸ் ஆனார். 


 
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி, யாருடைய சிவாரிசும் இல்லாமல் நானாக முயற்சித்து தான் சினிமாவில் நுழைந்தேன். தொலைக்காட்சிகளில் இருந்து  வெப் சீரிஸில் நடிக்க துவங்கிய போது தான் எனக்கு நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் எனது சினிமா கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. 
 
அஜித்தைத் தொடர்ந்து விஜய் உடன் நடிக்க நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரோடு நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிடுவேன் என்று கூறியுள்ளார்.