திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2019 (12:32 IST)

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில் அஜித் பக்கம் திரும்பிய ஸ்ரீ ரெட்டி..!

தெலுங்கு சினிமா சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்ககளின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார். 


 
இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீ ரெட்டியிடம், திரை உலகில் நீங்கள் மனதார ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது யாருக்கு கொடுப்பீர்கள் என கேட்க, அதற்கு சற்றும் யோசிக்காத ஸ்ரீ ரெட்டி, "எந்த ஒரு காம உணர்வும் இல்லாமல் அன்பின், பாசம் வெளிப்பாடான ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் நான் அதை “அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துக்கு” தான் கொடுப்பேன். காரணம், அவர் நடித்திருந்த "நேர்கொண்ட பார்வை" படம் தான். அந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பெண்களின் நிலைமையும் என் வாழ்வின்  நிஜத்தில் நான் அனுபவித்துள்ளேன்.    
 
அஜித் தான் சினிமா திரையில் ஜாம்பவான் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். என்னிடம் கேட்டல் " லெஜெண்ட் " விருதை  அஜித்துக்கு  தான் கொடுப்பேன். அத்தோடு அவருடைய காலில் விழுந்து வணங்குவேன்" என நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.