கட்டணத்தை திரும்ப பெற்ற 'நேர் கொண்ட பார்வை' படம் பார்த்த ரசிகர்கள்!

ner konda parvai
Last Modified திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (08:00 IST)
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் திரையரங்க உரிமையாளர்களிஅம் இருந்து கட்டணத்தை திரும்பப் பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் நடித்த 'நேர்கொண்டபார்வை' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படம் தமிழகம் முழுவதும் ரூபாய் 30 கோடி வசூல் செய்துள்ளதாகவும், அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் ரூபாய் 4 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் 'நேர்கொண்ட பார்வை' படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணங்கள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்ததில் ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் போன்ற பகுதிகளில் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் அதிக கட்டணம் ரசிகர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது
இதனை அடுத்து அதிகமாக வசூல் செய்யப்பட்ட கட்டணங்களை திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்ற அதிகாரிகள், அந்த பணத்தை பார்வையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். அஜித் படத்தை பார்க்க வந்து, கட்டணத்தை திரும்பப் பெற்றது குறித்து ரசிகர்கள் கூறுகையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை கட்டணத்தை சரியாக திரையரங்க உரிமையாளர்கள் வசூலித்தால் திரையரங்குகளில் அதிக கூட்டம் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினார். மேலும் இதுபோன்ற அதிரடி ஆய்வு தமிழகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்இதில் மேலும் படிக்கவும் :