1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:24 IST)

ஓகே ஆன அருண் விஜய் & மிஷ்கின் திரைப்படம்! தயாரிப்பாளர் இவர்தான்!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அருண் விஜய் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

இயக்குனர் மிஷ்கின் ஒரு ஆண்டுக்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை உருவாக்குவதாக இருந்தார். இந்த படம் அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அப்படியே பேச்சுவார்த்தையோடு நின்ற நிலையில் இப்போது மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

அந்த படத்தை நடிகர் கயல் சந்திரனின் அண்ணன் தயாரிக்க உள்ளாராம். சுமார் 11 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக உள்ளது.