ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:03 IST)

மிஷ்கின் விஜய் சேதுபதி படத்தில் இணையும் ஏ ஆர் ரஹ்மான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் . இந்த படம் பிப்ரவரியிலேயே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. மிஷ்கின் படத்துக்கு முதன் முதலாக ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.