திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (19:06 IST)

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி..ACTC நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

actc -ar rahman concerts
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’  என்ற இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில்,  ACTC  நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற நிகழ்ச்சியைக் காண 20 ஆயிரம்பேர் கூடுவார்கள் என தெரிவித்து, காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்த நிலையில், கூடுதலாக 21 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 41 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு  ஏசிடிசி அளித்துள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில் தான் அனுமதி பெறப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதில் 400க்கும் மேற்பட்ட வாலிண்டியர்கள் மற்றும் செக்யூரிட்டிகள் ஈடுபடவுள்ளதாகவும், காவல்துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறைக்கு அக்கடித்ததில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், மேலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக எந்த தகவலும் இடம்பெறவில்லை. இதனால் குறைவான போக்குவரத்து போலீஸார் மற்றும் போலீஸார்  அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக சென்னை அண்ணா நகரில் உள்ள ஏசிடிசி அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று  நோட்டீஸ் வழங்கியுள்ளளனர்.

அதில், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் செலுத்த வேண்டிய 10 சதவீத கேளிக்கை செலுத்தாததால்  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.