ரசிகர்களுக்காக இலவசமாக இசைக் கச்சேரி நடத்தும் சந்தோஷ் நாராயணன்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். குறும்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்த பல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.
தற்போது தமிழைத் தாண்டியும் பிற மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் விரைவில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளாராம். இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் விலையில்லா டிக்கெட் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
விரைவில் இந்த கான்செர்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.