வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (22:10 IST)

'' ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி''.- நடிகர் கமல்ஹாசன் டுவீட்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் இறப்பிற்கு நடிகர் கமல்ஹாசன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் , கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஜமுனா இன்று  காலமானார் அவருக்கு வயது 86 ஆகும்.

மேடை நாடகத்தில் இருந்து திரைக்கு வந்த ஜமுனா பல தமிழ் தெலுங்கு உள்பட பழமொழிகளில் நடித்திருந்தார்.

மேலும்,   கமலஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இன்று அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வரும்  நிலையில்,  நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் ஜமுனா. அவர் நடித்த படங்களுக்கு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறேன். பிற்பாடு பல படங்களில் அவர் எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஓர் அரசியல்வாதியாக மக்கள் பணியும் செய்தவர். ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி'' என்று தெரிவித்துள்ளார்.