திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:05 IST)

மீண்டும் தென்னிந்திய சினிமாவில் நவாசுதீன் சித்திக்!

பாலிவுட் சினிமாவில் மிகச்சிறந்த பல வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நவாசுதீன் சித்திக்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாஸுதீன் சித்திக்கி தனது அசுரத்தனமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர். ஒவ்வொரு படத்துக்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர் நவாசுதீன். தமிழில் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் இப்போது தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகும் சைந்தவ் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சைலேஷ் கொலனு இயக்க, எஸ் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இந்த படம் பூஜையோடு தொடங்கியது.