திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (17:12 IST)

''வாரிசு ''படத்தில் என் டப்பிங் பணிகள் முடிந்தது- பிரபல நடிகர் டூவிட்

varisu
வாரிசு படத்தில் தன் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக பிரபல  நடிகர் ஸ்ரீமன் தெரரிவித்துள்ளார்.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், வாரிசு படத்தின் தமன் இசையில்  நடிகர் விஜய் பாடியுள்ள ‘’ரஞ்சிதமே’’ என்ற பாடல் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளதாககவும், அடுத்த வாரம் நிச்சயம் வெளியாகும் என கூறப்படுகிறது.

சமீபத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம் விஜய்யின் வாரிசு பட புதிய போஸடரை ரிலீஸ் செய்த நிலையில், இன்னொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

 நடிகர் விஜய்யின்  நெருங்கிய நண்பரும் நடிகருமான ஸ்ரீமன், இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள படத்தின் என் டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன்…என்று கூறி, விஜய்யின் முதல் எழுத்தான வி –என்று ஆங்கிலத்தில் குறித்து வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.
இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 
இப்படம்  வரும் 2023 ஆம் ஆண்டு சங்கராந்தியில் இப்படம் ரிலிஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj