ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (15:19 IST)

எப்பதான் வரும் வாரிசு முதல் சிங்கிள்… வெளியான தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது என்பதும் இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தீபாவளிக்கே வாரிசு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது முதல் சிங்கிள் பாடல் அடுத்த வாரம் கண்டிப்பாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.