வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (08:51 IST)

இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் இருப்பேன்… நடிகர் அமீர்கான் தகவல்!

தன்னுடைய 18 ஆவது வயதிலிருந்து சினிமாவில் இருக்கிறார் அமீர்கான். அவருடைய இந்த சினிமா வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். அவர் நடிப்பில் ரிலீஸான கடைசி படமாக லால் சிங் சத்தா படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.

இதையடுத்து இப்போது அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ள அவர் ‘என்னுடைய இளமைக் காலம் முழுவதையும் சினிமாவிலேயே கழித்துள்ளேன். என்னால் என் குடும்பத்துக்கோ மனைவிகளுக்கோ நேரம் ஒதுக்க முடியவில்லை. இதை நான் என்னுடைய 56 வயதில் உணர்ந்தேன்.

அதனால் நான் சினிமாவை விட்டு விலகலாம் என முடிவு செய்தேன். ஆனால் என் குழந்தைகள் அந்த முடிவை வேண்டாம் எனக் கூறினர். அதனால் இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் இருப்பேன். இப்போது ஆறு படங்களில் கமிட்டாகியுள்ளேன். இந்த இறுதிகாலத்தில் சிறந்த இயக்குனர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரோடு பணியாற்ற உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.