திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (14:25 IST)

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

சூதுகவ்வும் திரைப்படம் மூலமாக அறிமுகமான அசோக் செல்வன், அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் பல வெற்றி படங்களைக் கொடுத்து இப்போது தனக்கான ஒரு நிலையான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரின் போர்த் தொழில் மற்றும் ப்ளு ஸ்டார் ஆகிய படங்கள் வெற்றிப் படமாக அமைந்தன.

இந்நிலையில் இப்போது அவர் புதுமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தில் கதாநாயகியாக அவந்திகா நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். திருமலை இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

முழுக்க முழுக்க ரொமான்ஸ் படமாக உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாளை முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில் வசூல் பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.