செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (09:26 IST)

முகினுக்கு இன்ப அதிர்ச்சி தந்த பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் சண்டை, சச்சரவுமாக சென்று கொண்டிருந்தது. குறிப்பாக வனிதாவின் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பதால் பார்வையாளர்களுக்கு வெறுப்பாக உள்ளது. அவர் ஒரே ஒரு நாள் வாயை திறக்காமல் இருந்தால் நிம்மதியாக இருக்கும் என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட் வாரம் என கருதப்படுகிறது. அதன் அறிகுறியாக பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தர ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு முகினின் தாயார் முதலிலும் அதன்பின் சில நிமிடங்கள் கழித்து முகினின் சகோதரியும் வருகை தருகின்றனர். தாயாரையும் தங்கையையும் பார்த்த முகின் உற்சாகத்தில் துள்ளி குதிக்கின்றார். அவர்கள் இருவரையும் தூக்கி வைத்து கொஞ்சுகிறார். முகினின் பாசமழையை மற்ற போட்டியாளர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
 
அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டின் சீக்ரெட் அறையில் இருக்கும் சேரனும் இந்த நிகழ்வை பார்த்து ஆனந்தக்கண்ணீர் விடுகிறார். இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இல்லையே என்ற ஏக்கம் அவரது கண்ணில் தெரிகிறது